உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஸ் கசிவால் தீ விபத்து தாயும், மகளும் உயிரிழப்பு

காஸ் கசிவால் தீ விபத்து தாயும், மகளும் உயிரிழப்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில், 'காஸ்' கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததில், காயமடைந்த கர்ப்பிணி தாயும், அவரது 8 வயது மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.காஞ்சிபுரம், விளக்கடி கோவில் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 34; நெசவு தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை, 29; கர்ப்பிணி.இவரது தாய் வீடு, பிள்ளையார்பாளையம் லிங்கபாளையம் தெருவில் உள்ளது. இரு நாட்களுக்கு முன், 8 வயது மகள் கிருபாஷினியுடன் சென்றுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 8:00 மணி அளவில், தன் 8 வயது மகளான கிருபாஷினியுடன் வீட்டில் இருந்தார். அப்போது, சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது.அக்கம் பக்கத்தினரும், உறவினரும் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து இருவரையும் தீவிர சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிமேகலை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது மகள் கிருபாஷினி நேற்று மதியம் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ