மேலும் செய்திகள்
சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
01-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில் இருந்து, ஒழுக்கோல்பட்டு கிராமம் வழியாக, கீழ்வெண்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, செம்பரம்பாக்கம், பெரியகரும்பூர், கூரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர் ஒழுக்கோல்பட்டு, கீழ்வெண்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக பனப்பாக்கம், நெமிலி ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.அதேபோல, கீழ்வெண்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம் கிராமங்களின் வழியாக வெள்ளைகேட், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில், கூரம் - ஒழுக்கோல்பட்டு இடையே, புதிய சாலை போட்டனர். இந்த சாலையின் இருபுறமும் மண் அணைக்கவில்லை.இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மண் சாலையில் இருந்து, தார் சாலை மீது ஏறும் போது நிலை தடுமாறி கவிழும் சூழல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, புதிய சாலையோரம் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
01-Apr-2025