உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம்

 கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம்

காஞ்சிபுரம்: கோனேரிகுப்பம் ஊராட்சி மின் நகரில், சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்காத தால், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி மின் நகர் பிரதான சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சேதமடைந்து இருந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டி களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மாவட்ட ஊராட்சி நிதி குழு மானியம், 2023 - 24 நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய் செலவில், 226 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், 'டிட்வா' புயலால் காஞ்சிபுரத்தில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக, மின்நகர் பிரதான சாலையில், இரண்டாண்டிற்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையில், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து மழைநீர் தேங்குகிறது. எனவே, கோனேரி குப்பம் ஊராட்சி மின் நகரில், சேதமடைந்த சாலையை சீரமைக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ