உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத குளக்கரை சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

தடுப்பு இல்லாத குளக்கரை சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லம் சந்திப்பில் இருந்து பிரிந்து, வல்லம் கண்டிகை குளக்கரை சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.வல்லம் - வடகால்,ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிப்புரியும் ஊழியர்கள்,நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.இந்நிலையில், வாகனங்கள் அதிகமாக செல்லும் இந்த குளக்கரை சாலையில் தடுப்பு இல்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குளத்தில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளக்கரை சாலையில் தடுப்பு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை