உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஓரிக்கையில் சகதியான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 ஓரிக்கையில் சகதியான சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள ஜோகிர் காலனி சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, ஜோகிர் காலனி பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை போடப்பட்டது. தற்போது இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்து சிமென்ட் சாலை, மண் சாலையாக மாறி, ஆங்காங்கே மேடு பள்ளங்களாக உள்ளது. இதனால், மழைக்காலத்தில் சகதி சாலையாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, ஓரிக்கை, ஜோகிர் காலனி சாலைக்கு புதிதாக சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ