மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்த முள்செடியால் அவதி
17-May-2025
சாலையோர தடுப்புகள் சீரமைக்க எதிர்பார்ப்பு
12-May-2025
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, பாலுார் -- காஞ்சிபுரம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.இந்த சாலையில் செல்லும் ஜல்லி மற்றும் எம். -சாண்ட் லாரிகளில் இருந்து சரிந்து சாலையோரம் அதிகபடியான மண் குவிந்துள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள மண் குவியல் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக இடறிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, நெடுங்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-May-2025
12-May-2025