உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நல்லுார் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு

நல்லுார் ஏரி நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு

உத்திரமேரூர்:நல்லுார் ஏரி நீர்வரத்து கால்வாயை, நீர்வளத் துறையினர் துார்வாரி சீரமைத்துள்ளனர். உத்திரமேரூர் ஏரியில் இருந்து, நல்லுார் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக, உத்திரமேரூர் ஏரியில் திறந்து விடப்படும் நீரானது நல்லுார் ஏரியை சென்றடைகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, மண் துார்ந்து இருந்தன. கால்வாய் பராமரிப்பு இல்லாததால், கடந்த காலங்களில் நீரானது செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, அப்பகுதி விவசாயிகள் நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, உத்திரமேரூர் நீர்வளத் துறை அதிகாரிகள், நல்லுார் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை