மாகரலில் குறுகிய வளைவுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திர மேரூர் சாலையில், மாகரல்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூக்கும், உத்திர மேரூரில் இருந்து, காஞ்சி புரத்திற்கும், அரசு மற்றும்தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, ஏராளமான இருசக்கரவாகனங்களும் செல்கின்றன.இந்த கிராமத்தில், இரு இடங்களில் குறுகியசாலை வளைவுகள்உள்ளன. இந்த குறுகிய சாலை வளைவுகளில் திரும்பிச் செல்லும்போது, எதிரே வரும் வாகனங் களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் நோக்கி செல்லும்வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களால், மோதும் அபாயம்உள்ளது. எனவே, மாகரல்வளைவுகளில் இருபுறமும் விரிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.