இயற்கை உணவு கருத்தரங்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு மற்றும் நமண்டி பரஞ்சோதி ஞான ஒளி யக்ஞ பீடம் சார்பில், உடல் ஆரோக்கியமும், உணவு முறையும், இயற்கை உணவு முகாம், என்ற தலைப்பிலான கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த கருத்தரங்கில், நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவின் தன்மை குறித்தும், நம் உடலின் தன்மை அறிந்து ஆரோக்கியமான வாழ்விற்கு உணவே மருந்து என, இயற்கை உணவுகள் குறித்து, தஞ்சாவூர் கரந்தை மருத்துவர் புண் ணியமூர்த்தி பேசினார். பரஞ்சோதி ஞான ஒளி யக்ஞ பீடம் ஜெயபால் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விழுதுகள் தன்னார்வ அமைப்பு முருகன் பாலாஜி, மாப்பிள்ளை சம்பா இயற்கை அங்காடி, இனியா இயற்கை அங்காடி நிர்வாகத்தினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.