உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சந்தவெளி அம்மன் கோவிலில் நாளை நவராத்திரி விழா

சந்தவெளி அம்மன் கோவிலில் நாளை நவராத்திரி விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சந்த வெளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவ நவராத்திரி விழா நாளை துவங்கி, வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி இரவு 7:00 மணிக்கு மூலவர்அம்மன், பஞ்சமுக விநாயகர், கரகாட்ட நாயகி, அன்னபூரணி, லட்சுமி நரசிம்மர், பொட்டு அம்மன்,அங்காள பரமேஸ்வரி, கம்பாநதி காமாட்சி,தங்க சவசம், ஹரிஹரன், சரஸ்வதி மற்றும் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அக்., 15ம் தேதி, இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை