உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி - திருப்பதிக்கு புதிய பஸ் சேவை

காஞ்சி - திருப்பதிக்கு புதிய பஸ் சேவை

காஞ்சிபுரம் : அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை பணிமனை சார்பில், காஞ்சிபுரம் -- திருப்பதி இடையே, தடம் எண் 212எச், என்ற பெயரில், 17 அரசு பேருந்துகள், ஒரு நாளைக்கு 34 'சிங்கிள்' இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ஒரு பழைய பேருந்துக்கு மாற்றாக, ஒரிக்கை பணிமனைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிதாக ஒரு பேருந்து வழங்கப்பட்டது. புதிதாக வழங்கப்பட்ட பேருந்து சேவை துவக்க விழா, நேற்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடந்தது.காஞ்சிபுரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் தடம் எண் 212எச் என்ற இப்பேருந்தை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், ஓரிக்கை பணிமனை கிளை மேலாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் ஜனார்த்தனன், உதவி மேலாளர் தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ