| ADDED : மார் 15, 2024 12:24 AM
கிளார்:காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 175க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், 1955ல் கட்டப்பட்ட பழைய வகுப்பறை கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், 2021ல், அந்த கட்டடம் இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், எக்ஸ்னோரா அரசு சாரா சுற்றுச்சூழல் சேவை அமைப்பு சார்பில், 17.60 லட்சம் ரூபாய் செலவில் புதிய பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணி முடிந்து ஒரு மாதத்தில் புதிய வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.