தேசிய குத்துச்சண்டை போட்டி நியூ கல்லுாரி மாணவர்கள் தகுதி
சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல ஆடவர் குத்துச் சண்டை போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 3ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில், ராயப்பேட்டை நியூ கல்லுாரிமாணவர் சந்தோஷ், ஹரிஷ், சுபைர் அகமத், முகமது பகித் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோல், ஆர்.கே.எம்.வி., கல்லுாரி தருண், ஜெயா கல்லுாரி தியாகராஜன், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியின்டில்லிபாபு மற்றும் லோஷன் உள்ளிட்ட 12 பேர் வெற்றி பெற்று, சென்னை பல்கலை அணிக்குதேர்வாகியுள்ளனர்.தேர்வாகிய 12 பேர், அடுத்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள, தேசிய குத்துச்சண்டை போட்டி யில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.