உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  விதிமீறல் வழக்கு எதுவும் இல்லை

 விதிமீறல் வழக்கு எதுவும் இல்லை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் விதிமீறல் என, புகார் வந்தால் உடனடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகள் செய்கின்றனர். இருப்பினும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது விதிமீறல் அதிகளவில் நடக்கும் எனவும், அப்போது விதிமீறல் வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை