உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாசகர்கள் மத்தியில் நாவல், சமகால அரசியல் புத்தங்களுக்கு வரவேற்பு

வாசகர்கள் மத்தியில் நாவல், சமகால அரசியல் புத்தங்களுக்கு வரவேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பிப்., 10 வரை நடைபெறும் புத்தக திருவிழாவில், பல்வேறு பதிப்பகங்கள், ஆயிரக்கணக்கான தலைப்பில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இலக்கியம், நாவல், வரலாறு, சமகால அரசியல், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் என தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் முக்கியமான புத்தகங்கள் உள்ளன. பல வாசகர்கள் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது.புத்தக மதிப்புரை-------------திருப்பதி லட்டுவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியாடோல்ப்ரீ: 18004257700ஆசிரியர் : பி.சுவாமிநாதன்பக்கம்: 132விலை: ரூ.180ஹிந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றான திருப்பதியின் லட்டு வரலாறு, அதன் தனித்துவம் மற்றும் சிறப்புகள் பற்றி சுவாரஸ்யமாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதி பிரசாதமான லட்டு பிரபலமாகும். கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டவை குறித்தும், பிரமாண்ட யுகாதி உற்சவம் பற்றியும், அப்துல்கலாம் திருப்பதிக்கு வந்த பயணம் என, திருப்பதி லட்டு நுாலில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.-----------------நேதாஜி பேப்பர்ஸ்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியாடோல்ப்ரீ:18004257700ஆசிரியர் : தராசு ஷ்யாம்பக்கம்: 172விலை: ரூ.200வங்கத்து சிங்கம் என்றழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரண மர்மம் பற்றியும், அதன் பின்னர் வெளியிட்டப்பட்ட நேதாஜி ரகசிய ஆவணங்கள் பற்றியும் விளக்கியிருக்கிறார். ஜெர்மனியை விட்டு நேதாஜி வெளியேறியது, நேதாஜியின் சவப்பெட்டி மர்மம், நேதாஜியின் மரணம் பற்றி காந்தி என்ன நினைத்தார் என்பன பல்வேறு தகவல்களை இந்நுால் தருகிறது. நேதாஜி பற்றி வெளியிடப்பட்ட பல்வேறு தகவல்கள் சுவாரஸ்யமாக இடம் பெற்றுள்ளன.காஞ்சிபுரத்தில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு இப்போது தான் முதன்முறை நான் வருகிறேன். இங்கு எல்லா வகையான புத்தங்களும் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நகைச்சுவை, பழமொழி புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தேன். கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.-- எஸ்.சிவராம்காஞ்சிபுரம்ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் இருப்பது நன்றாக உள்ளது. யதார்த்த வாழ்க்கை தொடர்பாக பல புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் புத்தகங்கள் வாங்குவதை பார்க்க முடிகிறது. அனைத்து வயதினரும் இதை பயன்படுத்த வேண்டும். எனது சொந்த ஊர் விருதாச்சலம். புத்தகம் வாங்க இங்கு வந்தேன்.- எஸ்.அரவிந்தராஜி,விருதாச்சலம்கண்காட்சியில் இன்றுசிரிக்க சிந்திக்க- கோவை சாந்தா மணி.........பட்டிமன்றம்ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற்சியா? கூட்டு முயற்சியா?- திண்டுக்கல் லியோனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை