உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஒன்றிய மாநாடு

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஒன்றிய மாநாடு

உத்திரமேரூர்:தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், உத்திரமேரூர் வட்டார கிளை சார்பில், வட்டார மாநாடு திருப்புலிவனத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ஜெயக்குமார், உத்திரமேரூர் வட்டார தலைவர் குப்பன் முன்னிலை வகித்தனர்.அதில், குறைந்தபட்சம் ஓய்வூதியம் 7,850 வழங்கிட வேண்டும். அகவிலைபடி மற்றும் மருத்துவப்படி வழங்க வேண்டும்.குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி