உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஆறு, ஏரிகளில் மூழ்கி 6 பேர் இறந்தது பேரிடர் கிடையாது நிவாரணம் கிடைக்காது என அதிகாரிகள் விளக்கம்

 ஆறு, ஏரிகளில் மூழ்கி 6 பேர் இறந்தது பேரிடர் கிடையாது நிவாரணம் கிடைக்காது என அதிகாரிகள் விளக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாறு மற்றும் செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல, உத்திரமேரூர், தாமல் போன்ற பெரிய ஏரிகளும் நிரம்பி வழிகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில், யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், நீர்வள ஆதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. தாமல் ஏரியில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் நீர்நிலைகளில் குளிப்பதை தொடர்கின்றனர். இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். க டந்த அக்டோபர் மாதம், மாங்காடு நகராட்சியில், வீட்டருகே தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி, இரண்டரை வயது பெண் குழந்தை இறந்தது. அதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் வாரத்தில், ஏ ரி, ஆறுகளில் மூழ்கி, ஐந்து பேர் பலியாகினர். நத்தப்பேட்டை ஏரியில், சங்கரநாராயணன் என்பவரும், தாமல் ஏரியில் மூழ்கிய பாலா, 19 மற்றும் மணவாளன், 37, ஆகிய இருவரும், காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாற்றில் மூழ்கிய சிவசங்கரன்,17 என்பவரும், இளையனார்வேலுார் கிராமத்தில் பாயும் செய்யாற்றில் மூழ்கிய உமாமகேஸ்வரன்,37, என்ற நபர் என, மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர். ஆ று, ஏரி என நீர்நிலைகளில் மூழ்கி இறந்த 6 பேரும் பேரிடரால் இறக்கவில்லை என, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாய் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது: ஆறு பேர் இறந்தது பேரிடராக கருத முடியாது. இடி, மின்னல் தாக்கி இறந்தாலோ, மின்சாரம் பாய்ந்து இறந்தாலோ, ஆறுகளில் அடித்து சென்று இறந்தாலோ பேரி டர் நிவாரண நிதி கிடைக்கும். ஆறு, ஏரிகளில் குளிக்க சென்று இறந்தால், அவற்றை பேரிடராக கருத முடியாது. முதல்வர் நிவாரண நிதியில் உதவி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ