உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளைஞர்களுக்கான ஒற்றுமை கிரிக்கெட் ஒழையூர் கே.எப்.சி., அணி வெற்றி

இளைஞர்களுக்கான ஒற்றுமை கிரிக்கெட் ஒழையூர் கே.எப்.சி., அணி வெற்றி

காஞ்சிபுரம்,இளைஞர்களுக்கான, ஒற்றுமையை வலியுறுத்தி, வாலாஜாபாத் அடுத்த ஒழையூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ஒழையூர் மோட்டூர் கே.எப்.சி., அணியினர் வெற்றி பெற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சியில், இளைஞர்களுக்கான ஒற்றுமையை வலியுறுத்தி, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள், சர்வம் பைனான்ஸ் லிமிடெட் சார்பில், கிரிக்கெட் போட்டி நடந்தது.குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் குமரகுரு போட்டியை துவக்கி வைத்தார்.இதில், நத்தப்பேட்டை ஹேண்ட் இன் ஹேண்ட் அணி, ஒழையூர் எம்.எஸ்.கே., அணி, ஒழையூர் மோட்டூர் கே.எப்.சி., அணியினர் மோதினர். இதில், இறுதிப்போட்டியில் எம்.எஸ்.கே., அணியும், கே.எப்.சி., அணியினரும் மோதினர்.இதில், எம்.எஸ்.கே., அணியினர் டாஸ் வென்று 'பேட்டிங்' தேர்வு செய்து 20 ஒவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தனர்.இதை தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒழையூர், மோட்டூரைச் சேர்ந்த கே.எப்.சி அணியினர் ஆட்டத்தை துவக்கினர்.இதில், வீரர் சூர்யா தொடர்ந்து விளையாடி 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று கே.எப்.சி., அணியினர் கோப்பையை கைப்பற்றினர். இப்போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு சுழல் கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.இன்றைய இளைஞர்கள் போதை பழக்கம், மொபைல்போன் அடிமை உள்ளிட்ட பழக்கங்களில்இருந்து விடுபட, இது போன்ற இளைஞர்களுக்கான ஒற்றுமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என, கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாட்டாளர் முதன்மை மேலாளர் கிருபாகரன் தெரிவித்தார்.வட்டார மேலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி