உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து, 60, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், 'டி.வி.எஸ்.,' ஸ்கூட்டரில் ஒரகடத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்றார்.மாத்துார் நாகாத்தம்மன் கோவில் அருகே சென்ற போது, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, ஒரகடம் நோக்கி வந்த, 'ஸ்பிளண்டர்' பைக் மீது மோதி விழுந்தார். இதில், அல்லிமுத்துவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அதேபோல, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த, காஞ்சிபுரம் புள்ளூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 39, முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிசிக்சைக்கு அனுப்பினர். இதில், அல்லிமுத்து உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை