உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை, திருவேற்காடு, சங்கரேஸ்வரி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன், 59. நேற்று முன்தினம் ‛எமஹா ரேஹீ' ஸ்கூட்டரில் ஆரணி அருகே, கலம்பூரில் இருந்த திருவேற்காட்டிற்கு வந்தார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ‛ஈச்சர்' லாரி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ