உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் குபேர வாசல் திறப்பு

 காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் குபேர வாசல் திறப்பு

காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ராஜகுபேரர் கோவிலில், நேற்று திறக்கப்பட்ட குபேர வாசல் வழியாக சென்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வெள்ளகேட், குபேரபட்டிணத்தில் ராஜகுபேரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள குபேர வாசல் ஆண்டுதோறும் கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டு, அவ்வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி நடப்பாண்டு கார்த்திகை மாத சிவராத்திரியான நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு ராஜகுபேரருக்கு பல்வேறு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, குபேர வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஒரு கி.மீ., துாரத்திற்கும் மேல், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணி வரை குபேர வாசல் வழியாக சென்று மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ