உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் ஒன்றியத்தில் பொது கட்டடங்கள் திறப்பு

உத்திரமேரூர் ஒன்றியத்தில் பொது கட்டடங்கள் திறப்பு

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம், வயலுார், நோணாம்பூண்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், குழந்தைகள் நேய உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன.இதேபோன்று, உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள வேடபாளையம் மற்றும் 1, 3வது வார்டுகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.இப்பள்ளி கட்டங்களுக்கான பணி முடிந்ததையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.அதை தொடர்ந்து, பூந்தண்டலம், அகரம்துாளி, நாஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பழுதான ரேஷன் கடைகளுக்கு மாற்றாக கட்டிய புதிய கட்டடங்களும் நேற்று திறப்பு விழா காணப்பட்டன.இதேபோன்று, திணையாம்பூண்டி, அழிசூர், கட்டியாம்பந்தல், சிறுங்கோழி ஆகிய பகுதிகளில் புதியதாக கட்டிய பால் கொள்முதல் நிலையங்கள்.ஆதவப்பாக்கத்தில், அங்கன்வாடி மையத்திற்கான சமையலறை, மருத்துவன்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பெருநகரில் அங்கன்வாடி மையம், மானாம்பதி கண்டிகையில், துணை சுகாதார நிலையம் போன்றவைக்கான கட்டட திறப்பு விழாவும் நேற்று நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா, உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ