வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர், சன்னிதி தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வீடு, நிலம், மனை ஆகியவை வாங்க, விற்க மற்றும் பத்திரப்பதிவு செய்து வந்தனர்.சார் - பதிவாளர் அலுவலக கட்டடம், சேதமடைந்து இருந்ததால், இங்கு வரும் மக்கள் அச்சத்துடனே வந்து சென்றனர். எனவே, சேதமடைந்த பழைய கட்டடத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், 1.88 கோடி ரூபாய் செலவில், உத்திரமேரூரில் புதிய சார் - பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. அதை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,- சுந்தர், மாவட்ட பதிவாளர் முரளி, சார் பதிவாளர் நவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.