உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தங்கப்பத்திரம் திட்டத்தில் சேர வாய்ப்பு

தங்கப்பத்திரம் திட்டத்தில் சேர வாய்ப்பு

காஞ்சிபுரம்:தங்கப்பத்திர திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:நாடு முழுதும், தங்கப்பத்திரம் வெளியீட்டு திட்டம், நாளை முதல், பிப்.,16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கும், அனைத்து தபால் நிலையங்களில், பொது மக்கள் சேர்ந்து பயன் பெறலாம்.ஒரு கிராம் தங்கம், 6,263 ரூபாய்க்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தங்கப்பத்திர திட்டத்தில் சேர விரும்புவோர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், காஞ்சிபுரம் என்கிற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 -- 2722 2901 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்