மேலும் செய்திகள்
இலவச பட்டா வழங்க மலைக்கிராமத்தினர் கோரிக்கை
29-May-2025
படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே செரப்பணஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என, 39 நபர்களுக்கு, தலா 2 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, ஆரம்பாக்கம் கிராமத்தில் நிலம் அளவிடும் பணியில், வருவாய் துறையினர் நேற்று ஈடுபட்டனர்.இதை அறிந்த அப்பகுதி மக்கள், 30க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.இதையடுத்து, நிலம் அளவிடும் பணி நடந்தது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
29-May-2025