பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளூர் புகார் குழு அமைக்க உத்தரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.பணியிடங்களில் பாலியல் தொடர்பான புகார்கள் பெற்று, இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.இப்புகார் குழு அமைக்கப்படாதபட்சத்தில், 50,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை www.shebox.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக எந்தவித பயமும் இன்றி, பெண்கள் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.