உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குவாரி குத்தகை விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க உத்தரவு

குவாரி குத்தகை விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க உத்தரவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார் மற்றும் ஸ்ரீபெரும்துார் ஆகிய தாலுகாக்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குவாரிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணை சீட்டுகள் கடந்தாண்டு செப்டம்பரிலும், நடை சீட்டுகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க ஏதுவாக இணையவழி சேவையினை மாநிலம் முழுதும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குவாரி குத்தகை கோரும் விண்ணப்பங்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை, இம்மாதம் 7ம் தேதி முதல் mimas.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.வாகன ஓட்டுநர்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய அனுமதிசீட்டும், கிரஷரிலிருந்து எம்-சாண்ட், ஜல்லி, சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும்.அவற்றினை வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் குவாரிப் பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை