உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, சதுக்கம் பகுதியில்வசித்து வருபவர் கண்ண னின் மகன் நாராயணன், 22; இவர், கடந்த 29ம் தேதி,காக்கநல்லுார் சாலையில் இருந்து, உத்திரமேரூருக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். துர்க்கையம்மன் கோவில் அருகே சென்றபோது, வாகனம் கட்டுபாடின்றி, நிலை தடுமாறி, சாலையோரமாக இருந்த கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினார்.செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர், பின், மேல்சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், நேற்று முன்தினம், மூளைச்சாவு அடைந்தார்.இதையடுத்து, உயிரிழந்த நாராயணனின் உடல் உறுப்புகள், பெற்றோர் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை