உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க ஓரிக்கை மக்கள் வலியுறுத்தல்

ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை பாலாறு வசந்தம் நகர், பிரதான சாலை வழியாக, வளத்தோட்டம், திருவண்ணாமலை மாவட்டம், துாசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை வளைவில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், சாலை வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லிகற்களால் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.எனவே, ஓரிக்கை பாலாறு வசந்தம் நகர் பிரதான சாலை வளைவு பகுதியில், சேதமடைந்த சாலையை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ