பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி வைர விழா மலர் வெளியீடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி வைர விழாவையொட்டி, சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரத்தில், 1950ல் துவக்கப்பட்ட பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரியில் வைர விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக சிறப்பு மலர் வெளியீட்டு விழா, கல்லுாரி முதல்வர் முருககூத்தன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் வைர விழா சிறப்பு மலரை வெளியிட, முதல் பிரதியை காஞ்சிபுரம் தி.மு.க., மேயர் மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். விழாவில், நிர்வாக குழு உறுப்பினர் ராஜ், உடற்கல்வி இயக்குநர் செந்தில் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் கல்லுாரி ஆட்சி மன்ற உறுப்பினர் முனைவர் அண்ணாதுரை வரவேற்க, முனைவர் பழனிராஜ் நன்றி கூறினார்.