உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்றங்கரையோர கிராமங்களில் நெல் நடவு செய்யும் பணி துவக்கம்

பாலாற்றங்கரையோர கிராமங்களில் நெல் நடவு செய்யும் பணி துவக்கம்

விப்பேடு:பாலாற்றாங்கரையோர கிராமங்களில், சொர்ணவாரி பட்டத்திற்கான, நெல் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு, ஏரி மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொர்ணவாரி, சம்பா, பின் சம்பா, நவரை உள்ளிட்ட பருவத்தில், ஏ.டி.டி., 36, ஐ.ஆர்.50, கோ 43, கோ 51, குண்டு, வெள்ளை பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.காஞ்சிபுரம் வட்டாரத்தில் பாலாற்றாங்கரை ஒட்டியுள்ள கிராமங்களான விப்பேடு, நரப்பாக்கம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் தாராளமாக கிடைப்பதால், இப்பகுதி விவசாயிகள், நிலத்தடி நீரை பயன்படுத்தி, சொர்ணவாரி பட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.இதில், நிலத்தை உழவு செய்தல், உழுத வயலை சமன்படுத்துதல், வரப்பு வெட்டுதல், நாற்று விடுதல் உள்ளிட்ட விவசாய பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை