உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு

உத்திரமேரூர், -உத்திரமேரூர் ஒன்றியத்தில், 22 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, இந்த கிராமங்களில் 12,000 ஏக்கர் பரப்பளவில், சொர்ணவாரி பருவ நெற்பயிர் நடவு செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், வேடபாளையம், மருத்துவன்பாடி, தளவராம்பூண்டி உட்பட 22 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ