/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்கம்பியில் உரசும் பனை மர ஓலைகள் பொன்னேரிகரையில் மின் விபத்து அபாயம்
மின்கம்பியில் உரசும் பனை மர ஓலைகள் பொன்னேரிகரையில் மின் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம், மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், பொன்னேரி ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பனை மரங்களின் கிளைகள் மின் கம்பியில் உரசியபடி உள்ளது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது பனைமர ஓலையில் மின்கம்பி உரசும்போது தீப்பொறி ஏற்பட்டு மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மின்விபத்து ஏற்படுவதற்குள் மின் கம்பியில் உரசும் பனை மரத்தின் ஓலைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.