உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுாரில் பரி வேட்டை உற்சவம்

ஸ்ரீபெரும்புதுாரில் பரி வேட்டை உற்சவம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் பாரிவேட்டை உற்சவம் நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், பாரிவேட்டை உற்சவம் நடத்தப்படும்.அதன்படி, நேற்று காலை, ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி உற்சவ மூர்த்திகள், கோவிலில் இருந்து புறப்பட்டு, வி.ஆர்.பி, சத்திரம் பாரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமாளை வழிபட்டனர்.மாலை 6:30 மணிக்கு, வாத்திய மேளங்களுடன், வான வேடிக்கை முழங்க பாரிவேட்டை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை, காந்திரோடு வழியாக, கோவிலை சென்றடைந்தனர்.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீபெரும்புதுார் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !