உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென்னேரியில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

தென்னேரியில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், தென்னேரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், தென்னேரி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயிலில் அவதிப்படுகின்றனர்.எனவே, தென்னேரி பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி