நிறுத்தத்தில் நிற்காத பேருந்து வெயிலில் வாடும் பயணியர்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காந்தி சாலையில், போக்குரவத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் இணைந்து மூன்று வழி பாதையாக மாற்றம் செய்துள்ளனர்.இதனால், காந்தி சாலையின் இருபுறமும் உள்ள கடைகளுக்கு தனி வழியும், ரங்கசாமி குளம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு நடுவே தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளதுகாஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, வாலாஜாபாத், செங்கல்பட்டு, செய்யாறு, தாம்பரம், வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்தி சாலையின் ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை.மாறாக, சாலை நடுவே பேருந்துகள் நிற்கின்றன. இதனால், பயணியரும் சாலை நடுவே நிற்க வேண்டியுள்ளது.தற்போது, கோடைக்காலம் துவங்கி, வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், முதியோர், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்குடையில் நின்று செல்ல மாவட்ட போலீசாரும், போக்குவரத்து கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.