உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாதுக்கு பி.டி.ஓ., நியமனம்

வாலாஜாபாதுக்கு பி.டி.ஓ., நியமனம்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் வட்டார நிர்வாகத்தை கவனிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக வரதராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.அவருக்கு, காஞ்சிபுரம்மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கத்தில் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வந்த சாந்தி என்பவரை, வாலாஜாபாத் வட்டார நிர்வாகம் கவனிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ