மேலும் செய்திகள்
தமிழக ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
25-Oct-2025
உத்திரமேரூர்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், உத்திரமேரூர் வட்டக்கிளை சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன், வட்டத் தலைவர் தசரதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில், அங்கன் வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியதாரர் களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25-Oct-2025