107 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் தீர்மானம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டல அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மண்டல தலைவர் ஆறுமுகம் தலைமையில், காஞ்சிபுரத்தில் நடந்தது. மாநில தலைவர் கதிரேசன் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.இதில், போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 107 மாதங்களாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை நீதிமன்ற உத்தரவின்படி வழங்க வேண்டும்.கடந்த 2023, ஏப்., மாதம் முதல், 2024 அக்., வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.அரசு துறை ஓய்வூதியர்களுக்கு அரசு இலவச காப்பீடு வசதி வழங்கியதுபோல், போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கும் பணம் பிடித்தம் இல்லாத இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கடந்த 2003ம் ஆண்டிற்கு பின் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.