உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை வளாகத்தில் செடி, கொடிகள் விஷ ஜந்துக்களால் மக்கள் அச்சம்

ரேஷன் கடை வளாகத்தில் செடி, கொடிகள் விஷ ஜந்துக்களால் மக்கள் அச்சம்

பூசிவாக்கம்:பூசிவாக்கம் ரேஷன் கடை வளாகத்தில், விஷ ஜந்துக்கள் தஞ்ச மடையும் வகையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகி பேட்டையில் உள்ள ரேஷன் கடையில், 341 கார்டுதாரர்களுக்கு, கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கடை வளாகத்தில் செடி, கொடி வளர்ந்துள்ளதால், அதில் பூரான், தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் சூழல் உள்ளது. இதனால், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோர் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, பூசிவாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகி பேட்டை ரேஷன் கடை வளாகத்தில் வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி