உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வி.ஏ.ஒ., காலி பணியிடத்தால் காட்டாங்குளத்தில் மக்கள் அவதி

 வி.ஏ.ஒ., காலி பணியிடத்தால் காட்டாங்குளத்தில் மக்கள் அவதி

உத்திரமேரூர்:காட்டாங்குளத்தில் இரண்டு ஆண்டுகளாக வி.ஏ.ஒ., பணியிடம் காலியாக உள்ளதால், வருவாய் துறை தொடர்பான சான்றுகள் உடனுக்குடன் பெறுதலில் சிக்கல் உள்ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில் காட்டாங்குளம், படூர் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கான கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, ஓராண்டாக சிறுமையிலுார் கிராம நிர்வாக அலுவலரும், தற்போது குண்ணவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் இந்த வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். கூடுதல் பொறுப்பு வகிக்கும் வி.ஏ.ஒ.,விற்கு பணி சுமை, கூடுதல் தூரம் போன்ற சிரமங்களால் சரி வர அலுவலகம் வராத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டுமே அலுவலகம் திறந்து செயல்படுவதாகவும் மற்ற நாட்களில் மூடியே வைத்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனால், காட்டாங்குளம் மற்றும் படூர் பகுதி மக்கள், வருவாய் துறை சம்பந்தமான சேவைகளை பெறுவதில் சிரமப்படுகின்றனர். எனவே, படூர், காட்டாங்குளம் வருவாய் கிராமத்திற்கு முழு நேரம் பணியாற்றும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி