உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுகாதார நிலைய திட்டம் நிறைவேற்றக்கோரி மனு

சுகாதார நிலைய திட்டம் நிறைவேற்றக்கோரி மனு

சீட்டணஞ்சேரி:சாத்தணஞ்சேரியில் துணை முதன்மை சுகாதார நிலையம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் அளித்தும், திட்டம் செயல்பாட்டிற்கு வராதது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சாத்தணஞ்சேரி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி அளித்த மனு: உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் துணை முதன்மை சுகாதார நிலையம் அமைக்க 2023ல் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான நிலம் ஒதுக்கப்பட்டு வருவாய் துறை அதிகாரிகள் சார்பிலான நேரடி சரி பார்ப்பு பணிகள் அப்போதே முடிவுற்றது. எனினும், இரண்டு ஆண்டுகளாக அடுத்தகட்ட பணிகள் துவங்காமல் திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால், சாத்தணஞ்சேரி பகுதியில் வசிப்போர் சுகாதார வசதிக்கு அவதிப்படும் நிலை தொடர்கிறது. எனவே, இத்திட்டம் தொடர்பான தற்போதைய நிலை குறித்து தெளிவுப்படுத்துவதோடு, சாத்தணஞ்சேரியில் துணை முதன்மை சுகாதார நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி