உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பழவேரி கிராமத்தில், கண்ணப்பிரான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, 1.70 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், பழவேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணி நடந்தது.இதையறிந்த கோவில் நிர்வாகம், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலை அமைக்க முயன்று வருவதாக, கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளது.புகார் மனுவில் கூறியுள்ளதாவது:உத்திரமேரூர் தாலுகா பழவேரி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலை அமைப்பதற்காக மண் சமன்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே, அப்பகுதியில் சிமென்ட் சாலை உள்ள நிலையில், அனுமதியின்றி மீண்டும் கோவில் நிலத்தில் சிமென்ட் சாலை அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை