உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டுமான பொருட்கள் தொழிற்சாலை புழுதியால் பினாயூர் விவசாயிகள் அவதி

கட்டுமான பொருட்கள் தொழிற்சாலை புழுதியால் பினாயூர் விவசாயிகள் அவதி

பினாயூர்:பினாயூரில் இயங்கும் கட்டுமானப் பொருட்கள் தொழிற்சாலை புகை மற்றும் புழுதியால் விவசாயம் பாதிப்பு மற்றும் விவசாயிகள் அவதிபடுகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில், ஏரிக்கரை அருகே விவசாய நிலங்களை விலைக்கு பெற்ற தனியார் நிறுவனம் கட்டுமானப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்சாலை அமைத்துள்ளது. இத்தொழிற்சாலையில், மணல், ஜல்லி உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுவதோடு, சாலைகளில் தார் ஊற்றுவதற்கான சிறு ஜல்லி போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிற்சாலையை சுற்றி பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து பரவும் புழுதி மற்றும் புகையால் சாகுபடி பயிர்கள் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இப்புழுதி காற்று மாசு மற்றும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அப்பகுதிவாசிகள் கூறிவருகின்றனர். எனவே, இப்பகுதியில் கட்டுமான பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து பரவும் புகை மற்றும் புழுதிகளை கட்டுப்படுத்தும் விதமான தொழில்நுட்பத்தை கையாள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பினாயூர் விவசாயிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை