300 பனை விதைகள் நடவு
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் முகாம் நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா தலைமை வகித்தார். பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம், தென் மாம்பாக்கம் ஏரிக்கரையில்,300 பனை விதைகளை நாட்டு நலப்பணிகள் திட்டம் மற்றும் சுற்றுச்சுழல் மன்ற மாணவியர் நடவு செய்தனர்.நாட்டு நலப்பணிகள் திட்ட செயல் அலுவலர் அற்புதராஜ் மற்றும் பள்ளி பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.