உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காவனுார் புதுச்சேரியில் 1,000 பனை விதைகள் நடவு

 காவனுார் புதுச்சேரியில் 1,000 பனை விதைகள் நடவு

உத்திரமேரூர்: காவனுார் புதுச்சேரியில், 1,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துார் கிராமத்தில், டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் வாயிலாக, ஆண்டுதோறும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்வது வழக்கம். இந்தாண்டில் இதுவரை, 90,000 பனை விதைகள் ஏரி, குளம், கால்வாய், ஆறு ஆகிய பகுதிகளில் நட்டுள்ளனர். இதையடுத்து, காவனுார் புதுச்சேரி குளக்கரையில், டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நற்பணி மன்றம் மற்றும் உத்திரமேரூர் லயன்ஸ் கிளப் சார்பில், 1,000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உத்திரமேரூர் ரோட்டரி சங்க தலைவர் கவுதம் சந்த் பங்கேற்று, பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நற்பணி மன்றத் தலைவர் தாமோதரன், உத்திரமேரூர் பேரூராட்சி கவுன்சிலர் தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ