உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த டென்னிஸ் ஆடுகளம் சீரமைக்க கோரி வீரர்கள் காத்திருப்பு விரிசலில் சிக்கி காயமடையும் வீரர்கள்

சேதமடைந்த டென்னிஸ் ஆடுகளம் சீரமைக்க கோரி வீரர்கள் காத்திருப்பு விரிசலில் சிக்கி காயமடையும் வீரர்கள்

காஞ்சிபுரம்:டென்னிஸ் விளையாட்டின் ஆடுகளம், புல் தரை, செம்மண் தரை, சிமென்ட் தரை, மரப்பலகையால் செய்யப்பட்ட உட்டன் தரை, சிந்தட்டிக் தரை என, ஐந்து வகையான ஆடுகளம் உள்ளன.இதில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில், 18 மீட்டர் அகலமும், 36 மீட்டர் நீளமும் கொண்ட சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தார், சிமென்ட், பெயின்ட் கலவை வாயிலாக உருவாக்கப்பட்ட சிந்தட்டிக் தரைதளத்துடன், இரண்டு டென்னிஸ் ஆடுகளம், அடுத்தடுத்து ஒரே இடத்தில் உள்ளது.இங்கு, காலை, மாலையில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் விளையாடி வருகின்றனர். மேலும், வட்டார, மாவட்ட, மாநில என, பல்வேறு அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியரும், இந்த ஆடுகளத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகின்றனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், டென்னிஸ் ஆடுகளத்தின் சிந்தட்டிக் தரைப்குதியில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு பெயர்ந்துள்ளது. இதனால், டென்னிஸ் விளையாடும் வீரர்கள், நிலைதடுமாறி தவறி விழுந்து காயமடைகின்றனர்.மேலும், சாதாரண மழைக்கே டென்னிஸ் ஆடுகளத்தில் மழைநீர் தேங்குவதால், விளையாட்டு வீரர்கள் டென்னிஸ் விளையாட முடியாத நிலை உள்ளது.இதுகுறித்து டென்னிஸ் வீரர் கூறியதாவது:டென்னிஸ் ஆடுகளத்தின் தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சிறுவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.இதனால், டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள், தங்களது விளையாட்டு திறனை முழுமையாக மேம்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் ஆடுகளத்தை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சேதமடைந்த இரு டென்னிஸ் ஆடுகளத்தை சீரமைப்பது தொடர்பாக, முழு விபரத்தையும் பொதுப்பணித் துறையினரிடம் வழங்கி விட்டோம்.டென்னிஸ் ஆடுகளத்தை சீரமைக்க, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் பொதுப்பணித் துறை வாயிலாக, இரு டென்னிஸ் ஆடுகளமும் சீரமைக்கப்படும்.சாந்தி,மாவட்ட விளையாட்டு அலுவலர்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி