மேலும் செய்திகள்
சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது
12-Nov-2024
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் பேரூராட்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த நவம்பர் மாதம் திடீரென மாயமானார். அவரை காந்தி தெருவில் வசிக்கும் ஜேம்ஸ், 26, என்பவர், காதல் திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.மேலும், பாலியல் துன்புறுத்தல் அளித்ததோடு, சிறுமியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த நிலையில், சிறுமி தன் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற ஜேம்ஸ், தன்னுடன் வரக்கூறி சிறுமியை அழைத்துள்ளார். அவர் மறுத்ததால், அடித்துள்ளார். இது குறித்து விசாரித்த காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் ஜேம்ஸை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
12-Nov-2024