உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பூந்தமல்லி : பூந்தமல்லியில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளி மாணவர்கள் சிலர், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறும், பேருந்து கூரைமீது ஏறி அமர்ந்து வீடியோ எடுத்து, 'ரீல்ஸ்' செய்த சம்பவமும் வீடியோவாக பரவியது.மேலும், போதை ஆசாமியை கற்களால் தாக்க ஓடிய வீடியோ காட்சி அண்மையில், சமூக வலைதளத்தில் வெளியானது. இவை தொலைக்காட்சி, நாளிதழ்களில் செய்தியாக வெளியாகின.இந்நிலையில், பூந்த மல்லி போலீசார் சார்பில்,இப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பங்கேற்று, படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்தும், நல்லொழுக்கம் குறித்தும்அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,'இனிவரும் காலங்களில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்தால், அவர்களை பள்ளியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை