உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பணி விலக்கு கேட்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சென்று புலம்பல்

 பணி விலக்கு கேட்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சென்று புலம்பல்

காஞ்சிபுரம்: வாக்காளர் தீவிர திருத்த பணி, பணிச்சுமையாக இருப்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பணி விலக்கு கோரி, தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவ.,4ம் தேதி முதல், வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் உள்ள, 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கி, திரும்ப பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14.22 லட்சம் வாக்காளர்களில், 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இன்னமும், கணக்கெடுப்பு படிவம் சேரவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாக்காளர் தீவி ர திருத்த பணி துவங்கியது முதலே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் புலம்பியபடி செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெற்று, மொபைல் ஆப்பில் விபரங்களை பதிவேற்றும் பணி செய்ய தெரியாமல், பல ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தி ணறுகின்றனர். இதனால், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சென்று, தங்க ளுக்கு பணி விலக்கு வழங்க கோரிக்கை விடுக்கின்றனர். ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் உள்ள ஓட்டுப்பதிவு அலுவலர்களிடம் சென்று, தங்களுக்கு பணி விலக்கு அளிக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர். அதிகாரிகள், ஓட்டுச்சாவடி அலுவலரிடம் பணி குறித்து விளக்கமளித்து, சமாதானம் செய்து அனுப்புவது வாடிக்கையாகி வருகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும், மொபைல் ஆப் பயன்படுத்த தெரியாது எனவும் பல காரணங்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்புவது, நான்கு சட்டசபை தொகுதியிலும் வழக்கமாக நடக்கும் நிகழ்வாக மாறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ